ஒருங்கிணைந்த AI இடைமுகமான 'ஜியா சாட்' அறிமுகம்: செங்குத்து SaaS துறையிலும் கால் பதிக்கும் Zoho.
பல்வேறு செயலிகளில் தகவல்களைத் தேடவும், வணிகச் சூழலைப் புரிந்துகொள்ளவும், செயல்பாடுகளை மேற்கொள்ளவும் உதவும் ஒருங்கிணைந்த AI இடைமுகத்தை Zoho அறிமுகப்படுத்தியுள்ளது.
சேவையாக மென்பொருள் (SaaS) துறையில் முன்னணி நிறுவனமான Zoho, 'Zia Chat' என்ற ஒருங்கிணைந்த உரையாடல் செயற்கை நுண்ணறிவு (AI) இடைமுகத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. பல்வேறு செயலிகளுடன் இணைந்து செயல்படும் இந்தத் தொழில்நுட்பம், தகவல்களைத் தேடுவது மட்டுமின்றி, வணிகச் சூழலைப் புரிந்துகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயனர்களுக்கு உதவும்.
Zohoவின் தனிப்பட்ட செயலிகளில் ஏற்கெனவேAI தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில்,ZiaChat நிறுவனத்தின் அனைத்து செயலிகளையும் இணைக்கும் பொதுவானAI பயனர் இடைமுகமாகச் செயல்படும் என்று அந்நிறுவனத்தின் இணை நிறுவனரும் தலைமை விஞ்ஞானியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.இதுகுறித்து அவர் கூறுகையில்,"ஊழியர்கள் ஒவ்வொரு நாளும் பல்வேறு மெனுக்கள் மற்றும் தனித்தனி மென்பொருள் இடைமுகங்களில் தகவல்களைத் தேடுவதில் அதிக நேரத்தைச் செலவிடுகின்றனர். இந்தச் சிக்கலைத் தவிர்க்கும் வகையில், வெவ்வேறு செயலிகளின் இடைமுகங்களுக்குப் பதிலாக, நிறுவனம் முழுவதும் ஊழியர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரே ஒருங்கிணைந்தAI இடைமுகத்தை நாங்கள் வழங்குகிறோம்" என்றார்.
மேலும்,ModelContextProtocol(MCP) போன்ற திறந்த தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால்,Zoho அல்லாத பிற நிறுவனங்களின் செயலிகளுடனும்ZiaChat இணைந்து செயல்பட முடியும். இதன் மூலம், பல்வேறு தளங்களில் உள்ள தகவல்களைப் பெறவும், ஒருங்கிணைந்த வகையில் பணிகளை மேற்கொள்ளவும் முடியும்.ZiaChat, குறிப்பிட்டAI மாதிரியைச் சார்ந்திராத(Modelagnostic) தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. இதனால், நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான பெரிய மொழி மாதிரிகளை(LLMs) தேர்வு செய்துகொள்ள முடியும். செலவு, திறன் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு AI மாதிரிகளுக்கு மாறுவதற்கான வசதியையும் இது வழங்குகிறது.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்றZohoவின்30வது முதன்மை நிகழ்வான'Zoholics'இல்,2025ஆம் ஆண்டில் இந்தியாவில் நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 47 சதவீதம் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.Zoho Workplace, Zoho One, Zoho CRM, Zoho Books மற்றும் Zoho People ஆகியவை வருவாய் அடிப்படையில் நிறுவனத்தின் முக்கியத் தயாரிப்புகளாக உள்ளன. தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சேவைகள்(ITeS), உற்பத்தி, வங்கி மற்றும் நிதிச் சேவைகள்(BFSI), தொழில்முறைச் சேவைகள் மற்றும் சில்லறை வர்த்தகம் ஆகிய துறைகள் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாகZohoவின் சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளர் அனுபவப் பிரிவு துணைத் தலைவர் பிரவல் சிங் தெரிவித்தார்.
இதற்கிடையே, குறிப்பிட்ட தொழில்துறைகளின் தேவைகளுக்கு ஏற்ப ஒருங்கிணைந்த மென்பொருள் தீர்வுகளை வழங்கும் செங்குத்து SaaS (VerticalSaaS) துறையிலும் விரிவடையZoho திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, சில்லறை வர்த்தகம், வாகனத் துறை, சுகாதாரம், வங்கி மற்றும் நிதிச் சேவைகள்(BFSI), ரியல் எஸ்டேட், கல்வி மற்றும் உணவகங்கள் என ஏழு துறைகளில் சிறப்புத் தீர்வுகளை அறிமுகப்படுத்த உள்ளது.ஒவ்வொரு துறையிலும் உள்ள முக்கிய வாடிக்கையாளர்களுடன் இணைந்து, அந்தந்தத் தொழில்துறையின் தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ப மென்பொருள் தீர்வுகளை உருவாக்கZoho திட்டமிட்டுள்ளது. படிப்படியாக, இந்தச் சேவைகளை மேலும் பல தொழில்துறைகளுக்கும் விரிவுபடுத்த நிறுவனம் இலக்கு கொண்டுள்ளது.
0
Leave a Reply